விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் வைத்து நான்காவது இலவச கண் சிகிச்சை முகாம் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்ளர் ப்ளக் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நவம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து சிறப்புற நடத்தினார்கள்.
முகாமிற்கு ஆலங்குளம் சுற்றியுள்ள 44 சிறு கிராமத்தில் இருந்து மொத்தம் 95 நபர்கள் கலந்து கொண்டார்கள். முகாமிற்கு வந்திருந்த 95 நபர்களில் 34 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிவகாசி ஸ்பார்க்ளர் ரோட்டரி கிளப் சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு திட்ட இயக்குனராக ஜி. செல்வராஜ் அவர்கள் தலைவராக மாதவன் செயலாளர் ஐ. மாடசாமி அவர்களும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மருத்துவர்களுக்கும் உணவு வசதி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment